சிந்திக்கத்தூண்டிய - சிக்கல்களுக்கு நன்றி, சேமிக்கத்தூண்டிய - நெருக்கடிகளுக்கு நன்றி,
கவனக்குறைவை உணர்த்திய - தோல்விகளுக்கு நன்றி, திருந்ததூண்டிய - தவறுகளுக்கு நன்றி , வைராக்கியம் வளர்த்த - அவமானங்களுக்கு நன்றி, பாராட்டும்படி வளரச்செய்த - பரிகாசங்களுக்கு நன்றி, எப்போதும் துணையிருக்கும் - நண்பர்களுக்கு நன்றி,
எப்போதும் வழிகாட்டும் - தமிழுக்கு நன்றி, எப்போதும் கைவிடாத - நம்பிக்கைக்கு நன்றி,
ஏச்சுக்கள் தாங்கும் - பணியாளர்களுக்கு நன்றி,
நன்றி.. நன்றி.. என் இதயம் - கனிந்த நன்றி .. ...

“நெருப்பில் பழுத்த இரும்பு குண்டு அந்த நெருப்பு மயமாகவே காணப்படுவதைப் போல, “நான் யார்?” என்ற சுய விசாரமாகிய தீ காய்ந்த உடலும் ஆத்மமயமே யாகி விடும்”. இதனால் ஞானியின் மூர்த்தி வடிவம் (உடல் முழுவதும்) ஈஸ்வர சொரூபமே அன்றி சாதாரணமான தல்ல என்று புலப்படும். யோகாக்கினியால் காயம் சுவர்ணமான தல்ல என்று புலப்படும். யோகாக்கினியால் காயம் சுவர்ணமயமாய்ப் பிரகாசிக்கும் என யோக சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் அனுபவமும் இதுவேயாகும். இவ்வாறு ஞானாக்கினியால் ‘நான்’ என்ற அகங்காரம் வெந்து சாகாமற் செத்து, பிறவாமல் ப்ரஹ்மாகாரனாகப் பிறந்த ஞானிக்கு அதன்பின் சாவிலும் பிறப்பிலும் (ஜனன மரண உபாதி) சம்பந்தம் அற்றே போகிறது.”
ReplyDelete