பேய் போல் திரிந்து பிணம்போல் கிடந்தது இட்ட பிச்சையெல்லாம் நாய் போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மைங்கையரை தாய் போல் கருதி தமர் போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி சேய்போல் இருப்பார் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே! .
பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதை மக்கள் தெரிகிலாது இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தென குறிப்பு பேசித்திரிவாரன்றிக் கொண்ட கோலம் என்னவோ நிறப்பும் பொந்தி அழிந்த போது சேமாமோ ஈசனே? ? ..