Thursday, October 7, 2010

நன்றிகள்

செயற்படத்தூண்டிய - சவால்களுக்கு நன்றி,  சாதிக்கத்தூண்டிய -  பகைவர்களுக்கு நன்றி,  
சிந்திக்கத்தூண்டிய - சிக்கல்களுக்கு நன்றி,  சேமிக்கத்தூண்டிய - நெருக்கடிகளுக்கு நன்றி,  
கவனக்குறைவை உணர்த்திய - தோல்விகளுக்கு நன்றி,  திருந்ததூண்டிய - தவறுகளுக்கு நன்றி , வைராக்கியம் வளர்த்த - அவமானங்களுக்கு நன்றி,  பாராட்டும்படி வளரச்செய்த - பரிகாசங்களுக்கு நன்றி,  எப்போதும் துணையிருக்கும் - நண்பர்களுக்கு நன்றி,
எப்போதும் வழிகாட்டும் - தமிழுக்கு நன்றி, எப்போதும் கைவிடாத - நம்பிக்கைக்கு நன்றி,
ஏச்சுக்கள் தாங்கும் - பணியாளர்களுக்கு நன்றி, 
நன்றி..  நன்றி..  என் இதயம் - கனிந்த நன்றி .. ...

வாழ்க்கை ஒரு சவால்

வாழ்க்கை ஒரு, சவால்!! வாழ்க்கை ஒரு, வரம்!! வாழ்க்கை ஒரு, துணிச்சல்!! வாழ்க்கை ஒரு, போர்!! வாழ்க்கை ஒரு வகை சுவை!! வாழ்க்கை ஒரு,தொடர்கதை!! வாழ்க்கை ஒரு, சோதனை!! வாழ்க்கை ஒரு, கடமை!! வாழ்க்கை ஒரு விளையாட்டு!! வாழ்க்கை ஒரு, ரகசியம்!! வாழ்க்கை ஒரு பயணம்!! வாழ்க்கை ஒரு, ஒப்பந்தம்!! வாழ்க்கை ஒரு மயக்கம்!! வாழ்க்கை ஒரு, வியப்பு!! வாழ்க்கை ஒரு, தேவை !! வாழ்க்கை ஒரு, மனசுகம்!! வாழ்க்கை ஒரு, வழித்தடம்!! வாழ்க்கை ஒரு, மகத்துவம்!! வாழ்க்கை ஒரு, போதனை!! வாழ்க்கை ஒரு, மாயை!! வாழ்க்கை ஒரு, மந்திரம்!! ..  வாழ்க்கை ஒரு, உண்மை!! ..

மனிதனின் நாக்கு

மனிதனின் நாக்கு!..  எதிரியை தாக்க - நீ ஏந்தலாம் மூவாயுதம், ஆனால், உன்னையே தாக்கும் உன்னிடமுள்ள - நாவாயுதம் மண்மிசை ஒரு மனுவிற்கு வரும் கேடுகள் மூன்று சதவிகிதம்! நாவால் வரும் அஞ்சுமல்ல, ஆறுமல்ல - நூறு சதவிகிதம்! நாவால் வரும் இரை, உரை, இவை இரண்டோடும் நிறையவே சம்பந்தமுள்ளது! நாக்கு ஒரு நீக்குப்போக்கு இன்றி நீளுமாயின், அதனை போகவிடலாமா அதன் போக்கு? நாக்கு செத்துப்போனால் - ஞானம் பிறக்கும் அது இறவாது இருக்குமாயின் - ஈனம் பிறக்கும்!! .. ..

மனித கோடாரிகள்

வெட்டி வெட்டியே, என்னை வளர்த்துவிட்ட மனித கோடாரிகளே! இங்கே பார், இங்கு ஒருவன் மேலே வர எத்தனிக்கிறான்! அவனிடத்திலும் கொஞ்சம் கருணை காட்டு! இரண்டு உளவாளிகளை போடு! அவனைக்கன்காணி! என்ன செய்கிறான் என்று அறிந்து மேலிடத்திற்கு போட்டுகொடு! அவனுக்காக நீ - நிதமும் சிந்தித்துக்கொண்டிரு! அவன் விடும் தவறுகளை பெரிதாக்கு! முடிந்தால் ஊருக்கே அம்பலப்படுத்து! அதோ பார், அதோ பார், மேலே ஏறுகிறான்.. என்னை வெட்டும்போது வழி தெரியாமல் இருந்ததே, அதே போல் அவனுக்கே தெரியாமல் கொஞ்சம் வெட்டி விடு, ஓ போதும் அவன் புரிந்து கொண்டான், நீங்கள்தான் சிறந்த வழிகாட்டிகள் என்று!! நன்றி மனித கோடாரிகளே!! 

சித்தனின் போக்கு?

சிந்தனைப்போக்கு .. சிகரத்தின் போக்கு .. சிறந்தவர்களைத்தேடும் போக்கு ..
சிக்கிமுக்கி கல்லின் போக்கு ..  சிங்கநாதப்ப்போக்கு ..  சிருட்சைப்போக்கு சித்தியாகு போக்கு .. சிநேக பாவப்போக்கு ..   சிரமசாத்தியபோக்கு ..  சிலேடைப்போக்கு ..  .. சிரஞ்சீவி போக்கு ....... 

மனிதனுக்கு மேலொரு தெய்வமும் இல்லை

மனிதனுக்கு மேலொரு - தெய்வமும் இல்லை..  இந்த மானுடம் போலொரு மெய்மையும் இல்லை ..  மனிதன்,  இயற்கையின் - எதிரொலிச்சின்னம் ...
உழைப்பு மனம் இல்லையேல்,  அவன் விலங்காண்டி இன்னும் .. 

வாய் ஞானம்

வான் என்பார்,  அண்டம் என்பார், வாய் ஞானமே .. .
பேசித் - தான் என்பார்,  வீணர்;  தனை அறியார் பூரணமே .. 

உலக வாழ்வு

எத்தனைதான் கற்றாலும்,  எத்தனைதான் கேட்டாலும்,  எத்தனை சாதித்தாலும்,  இன்பறா சித்தமே .. 
மெய்யாகத்தோன்றி விடும் உலக 
வாழ்வனைத்தும்,  பொய்யாகத்தோன்றாதபோது .. 

அடுத்த உலகம்

அடுத்த உலகம் என்றொன்றுமே இல்லை-கோள்
அடுத்த தல்லால் வேறுலகமும் இல்லை
படுத்தும் நரகமும் சொர்க்கமும் இல்லை- மக்கள்
பண்படாக் காலத்தில் புகுந்த ஓர்தொல்லை ..