Saturday, October 2, 2010

இறந்தவர் பிறப்பதில்லை

கறந்தபால் முலைப்புகா..  கடைந்த வெண்ணெய் மோர்புகா .. உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா..  விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும்போய் மரம்புகா .. இறந்தவர் பிறப்பதில்லை .. இல்லை இல்லை இல்லையே .. .. .. 

எக்காலம்?

மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்;
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்? 14

பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்;
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்? 15

உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்? 16
வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்? 11

ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவதும் எக்காலம்? 12

தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்? 13

வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம்? 17

பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம்? 18

ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்? 19

அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கெர்ப்பத்தில் வீழிந்து கொண்ட கோளறுப்பது எக்காலம் 23

கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம் 24

தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தாற்போல்
மாண்டு பிழைத்துவந்த வகை தெரிவது எக்காலம் 25

தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல்
ஆரியனைத் தேடி அடிபணிவது எக்காலம் 26

மூட நம்பிக்கை


ஏன் சித்தரே நீர் மௌன நார்த்தீகனாக இருப்பதாக அறிவித்தாய்? ..


ப்ரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே
உலகில் தர்மம் குறைந்து அதர்மம் மேலோங்கும்போதெல்லாம் என்னை பிறப்பித்துக் கொள்கிறேன்...
மூட நம்பிக்கைக்கு பின்னால் போய் நம்மவர்கள் எப்போது தமது கடமையைச் செய்ய மறுக்கிறார்களோ, அவர்களும
் மூடர்களாக மாறுகிறார்களோ, சித்தன் தன் மௌனத்தைக் களைப்õபன்...
சம்பவாமி யுகே... யுகே..