தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்
தனி மந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்
மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
மதிலினைச் சுற்றுவார் வாயிலைக் காணார்! ..
Welcome .. வணக்கம். எனது இணையத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.. நீங்கள் கொடுக்கும் ஆதரவும், ஊக்கமும்,கருத்துக்களும் என்னையும் எங்கள் தமிழையும் வளர்ப்பதற்காகவே........
Sunday, September 26, 2010
உண்மை ஞானம்
பேய் போல் திரிந்து பிணம்போல் கிடந்தது இட்ட பிச்சையெல்லாம் நாய் போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மைங்கையரை தாய் போல் கருதி தமர் போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே! .. ..
வாழ்க்கை பாடம் ..
வாழ்க்கை பாடத்தில் அனுபவ பயிற்சி பெற்று ஆசையென்னும் அலைமோதி ஆறாபுண்ணாம் துன்பமதை போக்குதற்கு வழியின்றி பொறியில் அகப்பட்ட எலிபோல இங்குமங்கும் ஓடியலையும் மக்களே! ஆசையினை அடக்கும் வழி ஆயிரம் நம் முன்னோர்கள் சொன்னதை படித்தும் கேட்டும்கூட மனம் பண்படவில்லையா? படித்ததெல்லாம் மறைத்து வைத்து பல்லாயிரம் ஆசை மனதில் சுமந்து வாழ்க்கை சூறாவளியில் சிக்கித் தவிக்கின்றார்!
மனதில் பதிந்த மாசு துடைத்து உள்ளமதில் உயர்வு கொண்டு எண்ணமதில் ஏற்றம் கொண்டு எங்கும் நிறைந்த பரம்பொருளை தியானம் செய்து இந்த வாழ்வு அவன் பிச்சை என்றெண்ணி வாழ்ந்திடுவோம்! விடியும் நேரம் அமைதிவரும் மடியும் நேரம் சொர்க்கம் வரும்! ஏமாற்றி வாழ்ந்து-கொலை கொள்ளை புரிந்து கோடிகள் குவிப்பதை விட கொல்லாது ஒருவரை புறம் சொல்லாது ஏழையாய் ..
வறுமையில் வாழ்ந்தாலும் சத்தியம் உன்னை அணைத்திருக்கும் தர்மம் தலைமடியில் அமர்ந்திருக்கும் தெய்வம் உன்னிடம் குடியிருந்து அமைதி வாழ்க்கைக்கு வேண்டியது கொடுக்கும்! வாழ்ந்து பார்ப்போம் சத்தியதீபம் கையிலேந்தி தாழ்ந்து பார்ப்போம் தர்மம் தனைமீறித்தந்து வீழ்ந்து எழும் அனுபவம் வாழ்க்கை தர்மமும் அதுவே! வீழும் முடிவில் வெல்லும்! . ..
Subscribe to:
Posts (Atom)


