மனிதனுக்கு மேலொரு - தெய்வமும் இல்லை.. இந்த மானுடம் போலொரு மெய்மையும் இல்லை .. மனிதன், இயற்கையின் - எதிரொலிச்சின்னம் ...
உழைப்பு மனம் இல்லையேல், அவன் விலங்காண்டி இன்னும் ..
Welcome .. வணக்கம். எனது இணையத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.. நீங்கள் கொடுக்கும் ஆதரவும், ஊக்கமும்,கருத்துக்களும் என்னையும் எங்கள் தமிழையும் வளர்ப்பதற்காகவே........
Thursday, October 7, 2010
உலக வாழ்வு
எத்தனைதான் கற்றாலும், எத்தனைதான் கேட்டாலும், எத்தனை சாதித்தாலும், இன்பறா சித்தமே ..
மெய்யாகத்தோன்றி விடும் உலக
வாழ்வனைத்தும், பொய்யாகத்தோன்றாதபோது ..
அடுத்த உலகம்
அடுத்த உலகம் என்றொன்றுமே இல்லை-கோள்
அடுத்த தல்லால் வேறுலகமும் இல்லை
படுத்தும் நரகமும் சொர்க்கமும் இல்லை- மக்கள்
பண்படாக் காலத்தில் புகுந்த ஓர்தொல்லை ..
Wednesday, October 6, 2010
நட்ட கல்
நட்ட கல்லை தெய்வம் என்று, நான்கு புஷ்பம் சாத்தியே சுற்றிவந்து முணுமுணுவென கூறும் மந்திரம் ஏதடா ?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில் ..
Tuesday, October 5, 2010
அறியொணாத சீவர்
சித்தர் என்றும், சிறியர் என்றும், அறியொணாத சீவர்காள்..
சித்தர் இங்கு இருந்த போது, பித்தர் என்று எண்ணுவீர் ..
சித்தர் இங்கு இருந்தும், என்ன பித்தன் நர்டிருப்பரே ..
அத்தன் நாடும், இந்த நாடும் அவர்களுக்கெலாமொன்றே ..
சாபம்
சாபம் கொடுத்திட லாமோ ? - விதி
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ?
விதி ..
எல்லாம் விதின்னு புலம்பறவங்களப்பற்றி என்ன நினைக்கிறீர் சித்தரே?
ஒருவனது முயற்சிகளை அழித்து, முடமாக்கும் மோசமான சதியே விதி... இவர்கள் கடைசிவரை புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். . அல்லும் பகலும்
தெருக் கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டமில்லையென்றுஅலட்டிக் கொள்வார் ..
முழித்துக் கொண்டோர் எல்லாம்
பிழைத்துக் கொண்டார் .. ..
Monday, October 4, 2010
நான்
நான் என்பது , தற்பெருமை! இப்படிச் சிலர்.. நான் என்பது தலைக்கனம்!இப்படிச் சிலர் .. நான் என்பது, தன்னம்பிக்கை! இப்படிச் சிலர் .. தன்னை உணர்ந்து, தலைநிமிர்ந்து நான்! என்றால், அது தற்பெருமையல்ல.. தலைக்கனமல்ல .. தன்னம்பிக்கைதான்! தன்னை உணராதவன் - நான் என நிமிர்வது கூத்து! ..
ஆசை
பொன்னாசை, பெண்ணாசை, போகேனே என்குதே ..
மக்கள் சுற்றத் தாசை, மறக்கேனே என்குதே..
திக்கரசாம் ஆசையது, தீரேனே என்குதே..
புகழ் ?
புகழ் எப்படி வருகிறது? ?
சிலர் வாங்குகிறார்கள், சிலர் வாங்கப்போய், வழுக்கி விழுகிறார்கள்.. சிலர் தாங்குகிறார்கள், சிலர் தாங்க முடியாமல், தலை கவிழ்கிறார்கள்.. சிலர் தியாகம் செய்து புகழ் பெறுகிறார்கள்.. சிலர் புகழுக்காக தியாகம் செய்கிறார்கள்.. ஒரு வகையில் புகழும் ஒரு போதைதான் ..
Saturday, October 2, 2010
இறந்தவர் பிறப்பதில்லை
கறந்தபால் முலைப்புகா.. கடைந்த வெண்ணெய் மோர்புகா .. உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா.. விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும்போய் மரம்புகா .. இறந்தவர் பிறப்பதில்லை .. இல்லை இல்லை இல்லையே .. .. ..
எக்காலம்?
மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்;
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்? 14
பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்;
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்? 15
உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்? 16
வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்? 11
ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவதும் எக்காலம்? 12
தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்? 13
வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம்? 17
பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம்? 18
ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்? 19
அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கெர்ப்பத்தில் வீழிந்து கொண்ட கோளறுப்பது எக்காலம் 23
கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம் 24
தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தாற்போல்
மாண்டு பிழைத்துவந்த வகை தெரிவது எக்காலம் 25
தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல்
ஆரியனைத் தேடி அடிபணிவது எக்காலம் 26
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்? 14
பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்;
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்? 15
உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்? 16
வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்? 11
ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவதும் எக்காலம்? 12
தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்? 13
வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம்? 17
பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம்? 18
ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்? 19
அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கெர்ப்பத்தில் வீழிந்து கொண்ட கோளறுப்பது எக்காலம் 23
கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம் 24
தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தாற்போல்
மாண்டு பிழைத்துவந்த வகை தெரிவது எக்காலம் 25
தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல்
ஆரியனைத் தேடி அடிபணிவது எக்காலம் 26
மூட நம்பிக்கை
ஏன் சித்தரே நீர் மௌன நார்த்தீகனாக இருப்பதாக அறிவித்தாய்? ..
ப்ரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே
உலகில் தர்மம் குறைந்து அதர்மம் மேலோங்கும்போதெல்லாம் என்னை பிறப்பித்துக் கொள்கிறேன்...
மூட நம்பிக்கைக்கு பின்னால் போய் நம்மவர்கள் எப்போது தமது கடமையைச் செய்ய மறுக்கிறார்களோ, அவர்களும் மூடர்களாக மாறுகிறார்களோ, சித்தன் தன் மௌனத்தைக் களைப்õபன்...
சம்பவாமி யுகே... யுகே..
Friday, October 1, 2010
மனமது செம்மையானால்
மனமது செம்மையானால், மந்திரம் செபிக்கவேண்டா.. மனமது செம்மையானால், வாயுவை வுய்த்த வேண்டா.. மனமது செம்மையானால், வாசியை நிறுத்த வேண்டா.. மனமது செம்மையானால், மந்திரஞ்ச்செம்மையாமே.!! ....
கூறு நெஞ்சே
நாடென்றும், நகரமென்றும், நலந்திழக்க, வாழ்வதென்றும் வீடென்றும், மனையாள், என்றும் மிக்கதோர் - மைந்தர் என்றும் மாடென்றும், சம்பந்தென்றும், வாஞ்சை கொண்டலைந்தாய் .. இந்த கூடொன்றும் அழிந்தாற்கூடத் தொடருமோ? கூறு நெஞ்சே ..
பஞ்சமெல்லாம் பொய்
துரத்தியுன்னை - ஆசை தொடராமல், என்றும் விரத்தியினால் - ஆங்கவத்தை விட்டுப், பரத்திலன்பு செய்யடா! செய்யடா! சேரப்ர - பஞ்சமெல்லாம் பொய்யடா! பொய்யடா! பொய்!!!
Thursday, September 30, 2010
உண்மை ஞானம்
பேய் போல் திரிந்து பிணம்போல் கிடந்தது இட்ட பிச்சையெல்லாம் நாய் போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மைங்கையரை தாய் போல் கருதி தமர் போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி சேய்போல் இருப்பார் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே! .
பேதை மக்கள்
பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதை மக்கள் தெரிகிலாது இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தென குறிப்பு பேசித்திரிவாரன்றிக் கொண்ட கோலம் என்னவோ நிறப்பும் பொந்தி அழிந்த போது சேமாமோ ஈசனே? ? ..
Subscribe to:
Posts (Atom)









.jpg)








